ETV Bharat / sports

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அசத்தல்! - இந்தியன் கிராண்ட் மாஸ்டர்ஸ்

Chennai Grand Masters Chess Championship 2023: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

chennai chess championship 2023
chennai chess championship 2023
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:34 PM IST

Updated : Dec 15, 2023, 9:44 PM IST

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி இன்று (டிச. 15) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது வரும் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது.

இத்தொடரில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்நிலையில், சென்னையில் உள்ள லீலா பேலஸில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி தொடங்கி உள்ளது. இப்போட்டியில் ஈரான், ரஷ்யா, உக்ரைன், அர்மேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 8 வீரர்கள் மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டனர்.

ஈரான் நாட்டை சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூ, உக்ரைன் நாட்டை சேர்ந்த பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே உள்ளிட்ட செஸ் பிரபலங்கள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர். அதேபோல் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா மற்றும் டி.குகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். இவர்கள் தலா 7 ரவுண்ட் ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டிகளில் விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க: சூர்யகுமார் சதம்.. விக்கெட் வேட்டையில் குல்தீப் யாதவ் - அபார வெற்றி பெற்று டி20 தொடரை டிராவில் முடித்த இந்தியா!

2,700 எலோ ரேட்டிங் கொண்ட கிளாசிக்கல் போட்டியை இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியைத் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 15 லட்சம் ரூபாயும், 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், 3வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 8 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

அதே போல் 4வது முதல் 8வது இடம் பிடிப்பவர்களுக்கு முறையே 5 லட்சம் ரூபாயும், 4 லட்சம் ரூபாயும், 3.5 லட்சம் ரூபாயும், 2.5 லட்சம் ரூபாயும், 2 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக பெறுவார்கள். இந்த நிலையில், இன்று (டிச. 15) முதல் சுற்று முடிவைடந்துள்ளது. இதில் அர்ஜூன் - ஹரிகிருஷ்ணா இடையே நடைபெற்ற போட்டியில், ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.

அதேபோல், கிராண்ட் மாஸ்டர் லெவன் அரோனியன் இந்திய கிராண்ட் மாஸ்டார் குகேஷ் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. மற்றொரு போட்டியில் ஈரான் வீரரான பர்ஹாம் மக்சூட்லூ - உக்ரைனை சேர்ந்த பாவெல் எல்ஜனோவிடம் தோல்வியை தழுவினார். மேலும், சனன் ஸ்ஜுகிரோவ் அலெக்சாண்டர் - ப்ரெட்கே இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தோனி Vs ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார்! ரூ.100 கோடி எங்க போச்சு? முழுத் தகவல்!

Last Updated : Dec 15, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.