ETV Bharat / sports

அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட பிரையன்ட்டின் ‘வாழ்த்தரங்கு’ விழா!

மறைந்த கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட்டின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ‘வாழ்த்தரங்கம் ’(Hall of Fame) விழாவை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைதுள்ளனர்.

Bryant's Hall of Fame induction postponed to next yearBryant's Hall of Fame induction postponed to next year
Bryant's Hall of Fame induction postponed to next year
author img

By

Published : May 28, 2020, 7:08 PM IST

உலக கூடைப்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக வலம் வந்தவர் கோபி பிரையன்ட். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது மகள் ஜியானாவுடன் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்தில் பிரையன்ட், அவரது மகள் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கடந்த வாரம் ஏலம் விடப்பட்ட பிரையன்ட்டின் உடமைகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலமெடுத்தனர்.

இந்நிலையில் பிரைன்ட்டின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் அமைப்பு கோபி பிரையன்ட்டின் வாழ்த்தரங்கத்தை நடத்த முடிவு செய்தது. இருப்பினும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்துவதாக அந்த தனியார் அமைப்பு அறிவித்துள்ளது.

இதையடுத்து ஹால் ஆஃப் ஃபேம் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி கொலங்கெலோ கூறுகையில், ‘கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டு நடத்தப்பட விருந்த கோபி பிரையன்ட்டின் வாழ்த்தரங்கு விழா ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், இவ்விழா 2021இன் முதல் காலாண்டிற்குள் நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தோனி ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாக்ஷி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.