ETV Bharat / sports

124 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ரத்துசெய்யப்பட்டது பாஸ்டன் மாரத்தான்! - 124 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ரத்துசெய்யப்பட்டது பாஸ்டன் மாரத்தான்!

கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக மாசசூசெட்ஸ் (Massachusetts) நாட்டில் நடைபெறவிருந்த பாஸ்டன் மாரத்தான் தொடர், ரத்து செய்யப்படுவதாக பாஸ்டன் தடகள அமைப்பு அறிவித்துள்ளது.

Boston Marathon cancelled for 1st time in 124-year history

author img

By

Published : May 29, 2020, 9:55 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக், ஐபிஎல், விம்பிள்டன், ஃபார்முலா ஒன் உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது பன்டேஸ்லிகா, லாலிகா உள்ளிட்ட கால்பந்துத் தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி நடத்துவதற்கு அந்நாட்டு அரசுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

இந்நிலையில், உலகின் மிகவும் பிரபலமான தடகள விளையாட்டுத் தொடரான 'பாஸ்டன் மாரத்தான் தொடர்' இந்தாண்டும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்க நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டிற்கான பாஸ்டன் மாரத்தான் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில் பாஸ்டன் தடகள கூட்டமைப்பு, 2020ஆம் ஆண்டிற்கான பாஸ்டன் மாரத்தான் போட்டிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், 'கரோனா வைரஸ் காரணமாக 2020ஆம் ஆண்டிற்கான பாஸ்டன் மாரத்தான் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இத்தொடரில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்த வீரர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை கட்டணப்பிடிப்பின்றி ஒப்படைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்று அறிவித்துள்ளது.

  • The @BAA has announced that the 124th Boston Marathon will be held as a virtual event, following Boston Mayor Martin Walsh’s cancellation of the marathon as a mass participation road running event due to the COVID-19 pandemic. pic.twitter.com/tlIdvsU9sq

    — Boston Marathon (@bostonmarathon) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேசமயம், 124ஆவது பாஸ்டன் மாரத்தான் தொடர், மெய்நிகர் நிகழ்வாக நடத்தப்படும் என்று பாஸ்டன் நகரின் மேயர் மார்டின் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் 42 கி.மீ தூரத்தை ஆறு மணி நேரத்தில் கடந்தால், அவர்களுக்கு போட்டியை நிறைவு செய்தோருக்கான பதக்கம் வழங்கப்படும் என்றும் பாஸ்டன் நகரின் மேயர் அறிவித்துள்ளார்.

1896ஆம் ஆண்டு முதல் பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் பாஸ்டன் மாரத்தான் 124 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2020 டி20 உலகக்கோப்பை தொடரின் தலைவிதி ஜூன் 10இல் தெரியவரும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.