உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, அடுத்து ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, இந்தத் தொடரில் 65 கிலோ எடைப் பிரிவில் முதல் நிலை வீரரும் இந்திய வீரருமான பஜ்ரங் புனியா பங்கேற்றார். காலிறுதிப் போட்டியில் 8-2 என்ற கணக்கில் வடகொரியாவின் ஜாங் சனை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறினார். இதன்மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
![Bajrang Punia](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ee0eny2u0aanar7_1909newsroom_1568906412_84.jpg)
இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர் கஜகஸ்தானின் தவ்லட் நியாஸ்பெகாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 9-9 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது. இருப்பினும், நடுவரின் சர்ச்சையான முடிவால் பஜ்ரங் புனியா தோல்வி அடைந்ததால், நாளை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடவுள்ளார்.
![Ravi kumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4491745_ravi.jpg)
இதேபோல், நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் 4-6 என்ற கணக்கில் சவுர் உகெவுடிடம் தோல்வியை தழுவியதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடவுள்ளார்.
இதையும் படிங்க:ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் கெத்துக்காட்டிய பஜ்ரங் புனியா