ETV Bharat / sports

பஜ்ரங் புனியா, இளவெனில் வளரிவானுக்கு இந்திய விளையாட்டு விருதுகள்! - இந்திய விளையாட்டு விருது

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் வளரிவான் ஆகியோருக்கு 2020ஆம் ஆண்டிற்கான இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) சார்பில் இந்திய விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.

Bajrang Punia, Elavenil Valarivan bag top honours at FICCI India Sports Awards

author img

By

Published : Dec 9, 2020, 5:18 PM IST

நாட்டின் விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்/ வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) சார்பாக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி 2019-2020 சீசனில் சிறப்பாக செயல்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, துப்பாக்கிசூடு போட்டியில் அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை இளவேனில் வளரிவான் ஆகியோருக்கு 2020ஆம் ஆண்டுக்கான FICCI-யின் இந்திய விளையாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா

விருதைப் பெற்ற பஜ்ரங் புனியா, தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘என்னுடைய இலக்கே, எதிர்காலத்தில் நாட்டிற்காக ஏராளமான பதக்கங்களை வென்று கொடுக்க வேண்டும் என்பதுதான். சில அங்கீகாரம் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும். இந்த விருது எனக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் வளரிவான்

மேலும் தமிழ்நாடு வீரங்கனை இளவெனில் வளரிவான் கூறுகையில், ‘‘ நான் முதலில் எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் என்னுடைய ஆலோசகர் ககன் நரங், பயிற்சியாளர் நேகா சவுகான் எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்தவர்கள். அதேசமயம் எனக்கு அனைத்து சூழ்நிலகளிலும் உதவிய தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதையு படிங்க:சாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸியை தோற்கடித்த ரொனால்டோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.