ETV Bharat / sports

கொரோனா அச்சுறுத்தல்: எஃப் 1 கிராண்ட் பிரிக்ஸ் ரத்து

எஃப் 1 கிராண்ட் பிரிக்ஸ் அமைப்பின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பந்தயம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Australian Grand Prix cancelled due to Corona virus

author img

By

Published : Mar 13, 2020, 12:14 PM IST

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்க பல நாடுகளில் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் விளையாட்டு ரத்து குறித்து நாளை அறிவிக்கப்படும் நிலையில் எஃப் 1 கிராண்ட் பிரிக்ஸ் ரத்தாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்னில் நடக்கவுள்ள தொடக்க பந்தயத்தை ரத்துசெய்ய கிராண்ட் பிரிக்ஸை சேர்ந்தவர்களும், எஃப் 1-ஐ சேர்ந்தவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட் பிரிக்ஸின் அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பந்தயத்தை ரத்துசெய்யும் முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது. இந்தப் பந்தயத்தைக் காண நுழைவுச்சீட்டை வாங்கியவர்களுக்குப் பணத்தைத் திரும்பி வழங்குவதற்கான தகவல்களும் விரைவில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... சர்ச்சையில் சிக்கிய ஃபெர்ராரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.