ஸ்விட்சர்லாந்து: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியானது கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர் பிரெண்டன் ரிக்கார்ட் 4x100 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.
இதையடுத்து அவர் ஊக்க மருந்தினைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என பலரும் கூறியதையடுத்து அவரிடமிருந்து மாதிரிகள் சேமிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. மேலும், இது தொடர்பான வழக்கு விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இதன் காரணமாக பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு இந்த விவகாரத்தில் கருத்து கூற மறுத்துவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கிற்காக ரிக்கார்ட்டின் மாதிரிகள் உயர்தர முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பொருள்கள் பயன்பாட்டில் நேற்மறை முடிவுகள் கிடைக்கப் பெற்றாலும், அவரது சிறுநீர் பரிசோதனை முடிவுகளில் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே, இந்த வழக்கின் தீர்ப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த வழக்கில் ரிக்கார்ட்டிற்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டால் நான்காவது இடத்தைப் பிடித்த பிரிட்டிஷ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் வாயப்புள்ளது.
தற்போது 37 வயதாகும் ரிக்கார்ட், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான ஆட்டமே நான் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல காரணம்: சாக்ஷி மாலிக்