ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் கலந்துகொண்டுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று சாதனைப்படைத்து வருகின்றனர். அதன்படி நேற்று (பிப். 20) நடைபெற்ற போட்டிகளில், திவ்யா காக்ரன் (68 கிலோ), பிங்கி (55 கிலோ), சரிதா மோர் (59 கிலோ) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
இதனிடையே, இன்று 53 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் மயு முகைடாவை எதிர்கொண்டார். இதில் 2-6 என்ற கணக்கில் வினேஷ் போகத் தோல்வியடைந்தார்.