ஜோர்டானில் குத்துச்சண்டைக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடர் நடந்துவருகிறது. அதன் இன்றையப் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார். இவரை எதிர்த்து மங்கோலியாவின் நாமுன் மாங்கோர் ஆடினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சிம்ரன்ஜித், போட்டியின் முடிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியைப் பதிவுசெய்தார். இந்த வெற்றியின் மூலம் சிம்ரன்ஜித் கவுர் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றுத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு, இந்தாண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கும் தகுதிபெற்றுள்ளார்.
-
Quota No 8💪@Simranjitboxer pulled off a stunner as she defeated NMonkhor of 🇲🇳to book her first #Olympic Games ticket to #Tokyo2020. Super show by 🇮🇳 as they equalize best ever representation and still 2⃣more quotas to earn from the Asian Qualifiers. Way to go Guys.💪#boxing pic.twitter.com/vW3dDclLgj
— Boxing Federation (@BFI_official) March 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Quota No 8💪@Simranjitboxer pulled off a stunner as she defeated NMonkhor of 🇲🇳to book her first #Olympic Games ticket to #Tokyo2020. Super show by 🇮🇳 as they equalize best ever representation and still 2⃣more quotas to earn from the Asian Qualifiers. Way to go Guys.💪#boxing pic.twitter.com/vW3dDclLgj
— Boxing Federation (@BFI_official) March 9, 2020Quota No 8💪@Simranjitboxer pulled off a stunner as she defeated NMonkhor of 🇲🇳to book her first #Olympic Games ticket to #Tokyo2020. Super show by 🇮🇳 as they equalize best ever representation and still 2⃣more quotas to earn from the Asian Qualifiers. Way to go Guys.💪#boxing pic.twitter.com/vW3dDclLgj
— Boxing Federation (@BFI_official) March 9, 2020
ஏற்கனவே ஒலிம்பிக் தொடருக்கு இந்தியாவிலிருந்து அமித் பஞ்சல், பூஜா ராணி, லாவ்லினா, விகாஸ் கிருஷன், சதீஷ் குமார், மேரி கோம், ஆஷிஷ் குமார் ஆகிய ஏழு பேர் ஒலிம்பிக் தொடருக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், சிம்ரன்ஜித் கவுரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது பதக்க கனவை அதிகரித்துள்ளது.
மேலும் நாளை நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் தைவானின் ஷீ யியூவை எதிர்த்து சிம்ரன்ஜித் ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற 5 குத்துச்சண்டை வீரர்கள்!