ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதன் ஆடவருக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அமித் பங்கலுடன் தென் கொரியாவின் கிம் இங்கியு (kim inkyu) மோதினார்.
இதில் அபாரமாக செயல்பட்ட அமித் பங்கல், கொரியாவின் கிம் இங்யுவை கலங்கடித்தார். இந்திய வீரரின் குத்துகளுக்கு பதிலளிக்க முடியாமல் கின் திணற, 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஆசிய தொடரின் முதல் தங்கத்தை அமித் பங்கல் வென்று சாதனைப் படைத்தார்.
மேலும், 49 கிலோ எடைப்பிரிவிலிருந்து முதன்முறையாக 52 கிலோ எடைப்பிரிவில் அமித் தங்கம் வென்று சாதித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.