ETV Bharat / sports

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுத்துக்கு முன்னேறிய இந்திய அணி! - சென்னை செய்திகள்

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 8, 2023, 10:23 AM IST

சென்னை: ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. வரும் சனிக்கிழமை வரை நடக்கும் இந்த போட்டியில், இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, மலேசியா ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், 5-ஆம் நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற போட்டியில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் 3 - 1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.

அதனைத் தொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11-ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33-ஆவது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.

இதையும் படிங்க: அரசு விரைவு பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு.. புலம்பும் பொதுமக்கள்!

பின்னர், இரவு 8.30 மணிக்கு இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3 - 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் ஆகியோ தலா ஒரு கோல் அடித்தனர். தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர். லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.