ETV Bharat / sports

ஆசிய கோப்பை ஹாக்கி: முதல் ஆட்டத்திலேயே தடம் பதித்த தமிழக வீரர்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அறிமுக வீரர் செல்வம் கார்த்தி முதல் கோலை அடித்து அசத்தினார்.

செல்வம் கார்த்தி, Selvam Karthi
செல்வம் கார்த்தி
author img

By

Published : May 24, 2022, 7:58 AM IST

ஜகர்தா (இந்தோனேஷியா): 11ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் நேற்று (மே 23) தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், இரண்டாம் பிரிவில் மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், ஓமன் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி நேற்று (மே 23) நடைபெற்றது. பிரேந்திர லக்ரா தலைமையிலான நேற்றைய இந்திய அணியில் தமிழக வீரர் செல்வம் கார்த்தி உள்பட 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இளம் இந்திய அணி, தனது பரமவைரியான பாகிஸ்தானை பந்தாடுமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதை வீணடித்தது. மீண்டும் 8ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை தமிழக வீரர் செல்வம் கார்த்தி கோலாக மாற்றினார்.

அதன்பின், பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் இந்திய வீரர்கள் கோல் அடிக்க தவறினர். முதல் பாதியில், 1-0 என முன்னிலை வகித்தாலும், பிற்பாதியின் 59ஆவது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் அப்துல் ராணா கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டநேர முடிவில், இரு அணிகளும் தலா ஒரு கோலை மட்டும் அடித்ததால், டிராவானது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஒரே ஒரு பெனால்டி வாய்ப்பே கிடைத்தது என்றாலும், அதை கோலாக மாற்றியது அந்த அணி. ஆனால், மறுபுறம் 7 பெனால்டி வாய்ப்பு கிடைத்தும், அதில் ஒரு கோலை மட்டுமே அடித்து மற்ற வாய்ப்புகளை வீணடித்தது. இந்திய அணியின் கோல் கீப்பர் சூரஜ் கர்கேரா ஏறத்தாழ பாகிஸ்தான் 5 கோல் முயற்சிகளை தடுத்து அணிக்கு பெரும் பங்காற்றினார்.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இன்று மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை தொடரில், அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி, கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் என தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புது முகங்களுக்கு வாய்ப்பு, சாம்ஸன் - தவானை கழற்றிவிட்ட பிசிசிஐ - எதிர்கால நலனா? ஓர் அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.