2019ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் பவர்லிஃப்டிங் மற்றும் ப்ரஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கனடா நாட்டின் நியூஃபவண்ட்லேண்ட், லேப்ரடார் நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 15ஆஅம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 28 வீரர்கள் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.
அதில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட தமிழ்நாடு வீராங்கனை ஆர்த்தி நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 72கி எடை பிரிவில் பங்கேற்ற ஆர்த்தி, பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் கனடா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் நடப்பு தொடரில் இவரது தங்கப் பதக்க கணக்கின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான தகுதியை ஆர்த்தி அருண் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று ஐந்து தங்கங்களை பெற்று தமிழ்நாடு வீராங்கனை ஆர்த்தி அருண் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இனி நீ பந்துவீச வேண்டாம்!' - இலங்கை வீரருக்கு ஐசிசி தடை