சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மிலிட்டரி ஒலிம்பிக் என்றழைக்கப்படும் இந்த ராணுவ விளையாட்டுப் போட்டிகளின் ஏழாவது தொடர் சீனாவின் வூகான் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே கால்களை இழந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக நடத்தப்பட்ட 100 மீ ஐடி1 ஓட்டப்பந்தயத்தில் பந்தய தூரத்தை 12 விநாடிகளில் கடந்த இந்திய வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக பெரு நாட்டின் கேசஸ் ஜோஸ் (12.65 விநாடி) இரண்டாம் இடமும் கொலம்பியாவின் பஜார்டோ பார்டோ டியோடிசிலோ (12.72 விநாடி) மூன்றாம் இடமும் பிடித்தனர்.
ஆனந்தன் குணசேகரன் 400 மீ ஐடி1 ஓட்டத்திலும் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இவர் கடந்தமுறை உலக மிலிட்டரி விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதங்கம் வென்றிருந்தார். மேலும், 2018ஆம் ஆண்டு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான 200மீ மற்றும் 400மீ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.