ETV Bharat / sports

டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை - மறுப்பு தெரிவித்த ஏர் இந்தியா - கிரண் ரிஜிஜு

டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்த குற்றச்சாட்டை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

Air India denies shooter Manu Bhaker's allegations of harassment

author img

By

Published : Feb 22, 2021, 8:01 AM IST

காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர். இவர் போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றுடன் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றார்.

துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா எனக் கேட்டு ஏர் இந்தியா அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றுள்ளதாக மனு பாக்கர் தெரிவித்தும், அவர் எடுத்துச் சென்ற பொருள்களின் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி, கூடுதல் கட்டணத்தை கேட்டு அவரை விமானத்தில் ஏற அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் மனு பாக்கர் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்து முறையிட்டார். பின் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து, போபாலுக்கு விமானத்தில் செல்ல மனு பாக்கர் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து மனுபாக்கர் அவருடைய சமூக வலைதளப் பதிவில், விமான நிலையத்தில் தன்னை துன்புறுத்தி, அவமதித்த இரண்டு ஏர் இந்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.

ஆனால் மனுபாக்கரின் குற்றச்சாட்டை ஏர் இந்தியா நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் ஊழியர் மனோஜ் குப்தா கவுன்டரில் தான் இருந்தார். அவர் எந்த நேரத்திலும் மனு பாக்கருடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. இது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனவே அவர் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு வெறுமனே கூறப்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: 9ஆவது முறையாக சாம்பியனான ஜோகோவிச்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.