லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 2 டையில் இந்திய அணி மொரோக்கோ அணியை 4க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. நேற்று (செப். 17) ஞாயிற்கிழமை நடைபெற்ற போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா - யுகி பாம்ப்ரி ஜோடி 6-க்கு 2, 6-க்கு 1 என்ற நேர் செட்டில் மொரோக்கோவின் பென்செட்ரிட் - யூனுஸ் லலாமி ஜோடியை வீழ்த்தியது.
பெங்களுருவை சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணா இந்த போட்டியுடன் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவே அவரது கடைசி போட்டியாகும். இந்தியாவுக்காக சுமார் 21 ஆண்டுகள் விளையாடிய சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. அதிகபட்சமாக லியாண்டர் பயசுடன் இவர் களமிறங்கிய ஆட்டங்கள் வெற்றிகளிலே நிறைவடைந்து உள்ளன.
இதையும் படிங்க: India Record: ஆஸ்திரேலியாவின் 20 ஆண்டுகால சாதனையை உடைத்த இந்திய அணி
இது குறித்து அவர் கூறும் போது; "என்னை சுற்றியுள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். இது எனக்கு நிச்சயமாக ஒரு உணர்ச்சிகரமான தருனம். இந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. மேலும், 2002ல் தான் எனது முதல் போட்டியை விளையாடினேன். அதன் பிறகு டேவிஸ் கோப்பை ஒரு நீண்ட மற்றம் அற்புதமான பயணம்.
நான் எப்போதும் நாட்டிற்காக சிறந்ததை கொடுக்கவே விரும்பினேன். இந்தியாவுக்காக விளையாடியது எனது வாழ்க்கையில் ஒரு மிகபெரிய தருனம்" என்றார். இதையடுத்து நடந்த மற்ற ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-க்கு 3, 6-க்கு 3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும் இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-க்கு 1, 5-க்கு 1, 10-க்கு 6 என்ற செட் கணக்கில் மொரோக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா அணி 4-1 என்ற கணக்கில் மொரோக்கோ அணியை வீத்தியது.
இதையும் படிங்க: Mohammed Siraj: இலங்கை மைதான ஊழியர்களுக்கு தனது பரிசை வழங்கிய சிராஜ்!