ஆண்டுதோறும் அண்டார்டிகாவில் நடைபெறும் அண்டார்டிக் மாரத்தான் ஓட்டப்பந்தயமானது இந்தாண்டு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியானது 42 கி.மீட்டர் தூரத்தை, பணி அடர்ந்த பகுதிகளில் ஓடி கடப்பதாகும்.
மேலும் இப்போட்டியின் நுழைவு கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பின்படி தனி நபர் ஒருவருக்கு, ரூ.13,48,287 கட்ட வேண்டும். இதன் மூலம் அங்கு சென்று வரும் போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு ஆகியவற்றை போட்டி குழுவினரே பார்த்துக்கொள்வார்கள்.
இந்தாண்டு நடைபெற்ற அண்டார்டிக் மாரத்தான் போட்டியில் கனடா நாட்டைச் சேர்ந்த 84 வயதான ராய் ஜோர்கன் என்பவர் பங்கேற்றார். இதன் மூலம் அதிக வயதில் அண்டார்டிக் மாரத்தானில் கலந்துகொண்ட முதல் நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், இந்தாண்டிற்கான அண்டார்டிக் மாரத்தானில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஹாஃபெர்டி, பந்தய தூரத்தை 3 மணி நேரம், 34 நிமிடம், 12 வினாடிகளில் கடந்து குறைந்த நேரத்தில் அண்டார்டிக் மாரத்தானில் வெற்றியை ஈட்டியவர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய கேப்டன் நியமனம்..! முக்கிய வீரர்களுக்கு அணியில் இடமில்லை!