கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே டிராக் மைதானத்தில் ஜே.கே. டயர்ஸ் சார்பாக 25வது தேசிய அளவிலான கார் மற்றும் பைக் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இரண்டாவது நாளாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - கேரளா - கர்நாடகா - ஜம்மு - பட்டியாலா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
ராயல் என்பீல்டு, கான்டினென்டல் ஜி.டி.கப் - எல்.ஜி.பி. பார்முலா 4 - ஜே.கே.டயர் எண்டுரன்ஸ் கப் - நோவிஸ் கப் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் பார்முலா கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் தனித்தனியே நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது சுற்று போட்டிகள் டிசம்பர் மாதம் இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா..!