மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கிவைத்த இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, கோவை, தேனி, சென்னை ஆகிய மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றுள்ளன.
சுமார் 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றுவருகிறது. இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு நினைவுப் பரிசாக கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.