ETV Bharat / sports

தயான்சந்த் பெயரில் புதிய விருதை அறிவித்திருக்கலாம் - முன்னாள் ஹாக்கி கேப்டன் கருத்து - MUNEER SAIT

தயான் சந்த் கேல் ரத்னா விருது என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும் அவரின் நினைவாக வேறு விருது ஒன்றை அறிவிப்பதே கூடுதல் சிறப்பாக இருக்கும் என அர்ஜூனா விருது வென்றவரும், இந்திய முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டனுமான முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டன் முகமது ரியாஸ், Olympian Mohammed Riaz
Olympian Mohammed Riaz
author img

By

Published : Aug 6, 2021, 11:05 PM IST

Updated : Aug 6, 2021, 11:11 PM IST

சென்னை: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி இன்று (ஆக.7) அறிவித்தார்.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு விளையாட்டு வீரர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி வீரர் முகமது ரியாஸ் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

இந்தியா சார்பில் இருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள முகமது ரியாஸ், அவருடைய விளையாட்டு பங்களிப்பிற்காக அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார். மேலும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தனி விருது - கூடுதல் சிறப்பு

இந்த பெயர் மாற்றம் குறித்து முகமது ரியாஸ் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில்,"ராஜிவ் காந்தி ஒரு சிறந்த பிரதமர். தயான் சந்த், ஹிட்லரே தனது நாட்டிற்காக விளையாட வரும்படி அழைப்புவிடுக்கும் அளவிற்கு பெரும் ஜாம்பவானாக திகழ்ந்தவர்.

தியான் சந்த் சிறந்த நினைவாகவும், அவரின் பெருமையை நிலைநாட்டவதற்கும் இந்த பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். இருப்பினும், அவரது நினைவாக ஒரு தனி விருது அறிவிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்றார்.

அரசியல் தலையீடு

சென்னையைச் சேர்ந்த மற்றொரு ஹாக்கி வீரரான முனீர் சைத்,"இது ஒரு அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு" என்றார். மேலும், இதுகுறித்து வேறு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடிவர், முனீர் சைத்.

ஒன்றிய அரசின் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: Tokyo Olympics 16ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

Last Updated : Aug 6, 2021, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.