ETV Bharat / sports

முதல் நிமிடத்திலேயே கோல்... நெதர்லாந்தை பழிதீர்த்த இந்தியா! - ரூபேந்தர் பால் சிங்

புபனேஷ்வர்: எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வலிமையான நெதர்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

rampant-india-crush-netherlands-5-2
rampant-india-crush-netherlands-5-2
author img

By

Published : Jan 19, 2020, 9:03 AM IST

Updated : Jan 19, 2020, 5:11 PM IST

2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு நடைபெறும் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் புபனேஷ்வரில் நடைபெற்றது. அதில் தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் நெதர்லாந்து அணி, ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் மோதியது. இந்த இரு அணிகள் கடைசியாக 2018இல் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் மோதியபோது, இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தோடு களமிறங்கியது.

ரூபேந்தர் பால் சிங்
ரூபேந்தர் பால் சிங்

இதனிடையே ஒலிம்பிக் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலரும் நீக்கப்பட்டு, இளம் வீரர்களே அணியில் இடம்பிடித்துள்ளனர். வலிமையான இரு அணிகள் மோதியதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.

முதல் குவார்ட்டர் ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்திய அணியின் நடுகள வீரர் குர்ஜந்த் சிங் கோல் அடித்து தனது வலிமையை நிரூபிக்க, அதனைத் தொடர்ந்து 12ஆவது நிமிடத்தில் இந்திய அணி வீடியோ ரெஃபெரல் (3ஆவது அம்பயர்) கேட்க, பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ரூபேந்தர் பால் சிங்
ரூபேந்தர் பால் சிங்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் டிஃபெண்டருமான ரூபேந்தர் பால் சிங், இரண்டாவது கோலை அடித்தார். இந்தக் கோலுக்கு பதிலடியாக நெதர்லாந்து அணியின் ஜிப் ஜான்சன் கோல் அடித்ததால் ஆட்டம் பரபரப்பானது. இதன்பின் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனை ஹர்மன் ப்ரீத் சிங் வீணடித்தார். இதனால் முதல் குவார்ட்டரின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து நடந்த இரண்டாவது குவார்ட்டரின் 19ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை நெதர்லாந்து அணி வீணடிக்க இந்திய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. இதையடுத்து ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் ஜெரோசன் ஹெர்ட்ஸ்பெர்கர் கோல் அடித்து 2-2 என சமன் செய்தார்.

அதுவரை முதல் பாதியில் (30 நிமிடம்) தடுப்பாட்டத்தில் சுணக்கம் காட்டிய இந்திய அணி அதன்பின் இரண்டாம் பாதியில் நடந்த தடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது. அதேசமயம், அட்டாக்கிங் ஆட்டத்திலும் ஈடுபட்ட இந்திய அணியின் நடுகள வீரர்கள் மந்தீப் சிங்கும் (34), லலித் (36) அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். இதனால், மூன்றாவது குவார்ட்டரின் இறுதியில் இந்திய அணி 4-2 என முன்னிலைப் பெற்றது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் மன்தீப் சிங்
கோல் அடித்த மகிழ்ச்சியில் மன்தீப் சிங்

பின்னர் கடைசி குவார்ட்டரின் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீடியோ ரெஃபெரல் கேட்டதால் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி ரூபேந்தர் பால் சிங், ஆட்டத்தில் தனது இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதையடுத்து நெதர்லாந்து அணி வீரர்களால் கோல்கள் அடிக்க முடியாததால், இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட லலித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் இந்திய அணி எடுத்த ஆறு ரிவ்யூக்களும் அணியின் வெற்றிக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குணேஸ்வரனுக்கு அடித்த லக்கி ஜாக்பாட் - ஜோகோவிச்சுடன் மோதலா?

Intro:Body:Conclusion:
Last Updated : Jan 19, 2020, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.