இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியில், இந்திய அணி இதுவரை ஒருமுறை மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் ஒடிசா மாநிகபுவனேஷ்வர் மற்றும் ரூர்கோலாவில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்காக 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் ரூர்கேலாவில் ஹாக்கி மைதானத்தை கட்டமைக்கவுள்ளதாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 15 ஏக்கர் பரப்பளவில் ரூர்கேலாவின் பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படும் இந்த மைதானத்திற்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த மைதானத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க:இந்திய அணியின் வெற்றியைப் புகழ்ந்து பாடிய ‘தமிழ் புலவர்’ ஹர்பஜன் சிங்!