ETV Bharat / sports

Hockey National Junior Championship: காலிறுதியில் வெளியேறியது தமிழ்நாடு! - கோவில்பட்டியில் சர்வதேச செயற்கை புல்வெளி மைதானம்

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் ஹாக்கி தொடரின் காலிறுதியில், தமிழ்நாடு அணி 3-7 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

Tamilnadu lost against Haryana in men junior Hockey
11ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி தொடர் காலிறுதி ஆட்டம்
author img

By

Published : Dec 23, 2021, 6:57 AM IST

தூத்துக்குடி: ஹாக்கி இந்தியா மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு ஏற்பாட்டில் முதன் முதலாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்வதேச செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 11ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, கேரளா உள்ளிட்ட 27 மாநில ஹாக்கி அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Tamilnadu lost against Haryana in men junior Hockey
11ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி தொடர் காலிறுதி ஆட்டம்

ஹரியானா ஆதிக்கம்

ஏழாவது நாளான நேற்று (டிசம்பர் 22) தொடரின் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில், ஹரியானா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி மோதியது.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், ஹரியானா முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், ஹரியானா 7 - 3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. இதன்மூலம், தமிழ்நாடு அணி காலிறுதிச்சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை: இந்தியாவுக்கு வெண்கலம் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.