சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர், வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில், 2019ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக இந்தியாவின் லால்ரேம்சியாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, வளர்ந்துவரும் வீரருக்கான விருதை இந்தியாவின் விவேக் சாகர் வென்றார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங், பெல்ஜியம் வீரர் ஆர்துர் வான் டுரேன், அர்ஜென்டினாவின் லுகாஸ் விலா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
-
Congratulations to 2019 FIH Player of the year (Men) - @manpreetpawar07
— International Hockey Federation (@FIH_Hockey) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vote results:
Manpreet Singh (IND) -35.2% of combined votes
Arthur Van Doren (BEL) -19.7% of combined votes
Lucas Vila (ARG) -11.7 % of combined votes
Breakdown: https://t.co/xmsM0jS82C#HockeyStarsAwards pic.twitter.com/Zvq3TiPzcg
">Congratulations to 2019 FIH Player of the year (Men) - @manpreetpawar07
— International Hockey Federation (@FIH_Hockey) February 13, 2020
Vote results:
Manpreet Singh (IND) -35.2% of combined votes
Arthur Van Doren (BEL) -19.7% of combined votes
Lucas Vila (ARG) -11.7 % of combined votes
Breakdown: https://t.co/xmsM0jS82C#HockeyStarsAwards pic.twitter.com/Zvq3TiPzcgCongratulations to 2019 FIH Player of the year (Men) - @manpreetpawar07
— International Hockey Federation (@FIH_Hockey) February 13, 2020
Vote results:
Manpreet Singh (IND) -35.2% of combined votes
Arthur Van Doren (BEL) -19.7% of combined votes
Lucas Vila (ARG) -11.7 % of combined votes
Breakdown: https://t.co/xmsM0jS82C#HockeyStarsAwards pic.twitter.com/Zvq3TiPzcg
இதில், 35.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆர்துர் வான் டுரேன், லுகாஸ் விலாவைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த வீரருக்கான விருதை மன்ப்ரீத் சிங் வென்றுள்ளார். இதன்மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். நடுகள வீரரான இவர் 2011இல் இந்திய அணிக்காக அறிமுகமாகினார்.
இதுவரை இந்திய அணிக்காக 260 போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார். கடந்த ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் இவர், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற முக்கியக் காரணமாக விளங்கினார்.
2012, 2016 ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இவர், இம்முறை டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தனது சிறப்பான கேப்டன்ஷிப்பால் இந்திய அணியை பதக்கம் வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரு ஓபன் : அரையிறுதியில் பயஸ்