ETV Bharat / sports

ஹாக்கி வீரர் மந்தீப் சிங்கிற்கு கரோனா! - தேசிய விளையாட்டு பயிற்சி மையம்

இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் மந்தீப் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

mandeep-singh-latest-hockey-player-to-test-positive-for-covid-19

author img

By

Published : Aug 10, 2020, 5:01 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் விளையாட்டு வீரர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். பின் கடந்த மாதம் வீரர்கள் பயிற்சிகளுக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஹாக்கி வீரர்கள், பெங்களூருவிற்கு திரும்பினர். பின் அவர்களுக்கு அங்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் மந்தீப் சிங்கிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், இந்திய ஹாக்கி அணியின் வீரர் மந்தீப் சிங்கிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு எந்தவித அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கோல் கீப்பர் கிரிஷன் பகதூர் பதக் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.