ETV Bharat / sports

தகுதிச் சுற்று ஹாக்கி: மந்தீப் சிங் அதிரடியால் இந்திய அணி வெற்றி! - மந்தீப் சிங்

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்று போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இந்தியாவின் மந்தீப் சிங் அசத்தியுள்ளார்.

indian hockey
author img

By

Published : Aug 20, 2019, 5:06 PM IST

Updated : Aug 20, 2019, 5:33 PM IST

ஒலிம்பிக்கிற்கான ஆண்கள் ஹாக்கி தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவும், ஜப்பானும் இன்று மோதிக்கொண்டன. இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, எதிரணியின் டிஃபென்ஸை சிதறடித்தது. அதன்படி ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே இந்தியாவின் நீலகண்ட ஷர்மா கோல் அடித்து அசத்தினார்.

ஹாட்ரிக் கோல் அடித்த மகிழ்ச்சியில் மந்தீப் சிங்

மேலும், ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் நிலம் செஸ் மீண்டும் கோல் அடித்தார். அதன்பின் ஆட்டத்தின் 9’,29’,30’-ஆவது நிமிடங்களில் இந்தியாவின் மந்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய அணியிண் வெற்றியை உறுதி செய்தார்.

அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியின் 25ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் கெண்டா டானகா கோல் அடித்தார். பின்னர் 36’ மற்றும் 52ஆவது நிமிடங்களில் ஜப்பான் அணி கோல் அடித்தது.

இதனையடுத்து இந்திய அணியின் குர்ஜண்ட் சிங் மேலும் ஒரு கோலடிக்க இறுதியில் இந்திய அணி 6-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

Intro:Body:

Mandeep scores hat-trick as India beat Japan 6-3 & reach final in Olympic Test Event hockey

Conclusion:
Last Updated : Aug 20, 2019, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.