ETV Bharat / sports

இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளர் நியமனம்! - கிரஹாம் ரீட்

இந்திய ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியளராக ஆஸ்திரேயாவின் முன்னாள் வீரர் கிரஹாம் ரீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய
author img

By

Published : Apr 9, 2019, 9:02 AM IST

2015ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரோலண்ட் ஓல்ட்மன்ஸ், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, ஹரேந்திர சிங் பயிற்சியாளராக இருந்தார். அவர் ஜூனியர் பயிற்சியாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கிரஹாம் ரீட்(54) நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இவர் பற்றிய சில குறிப்புகள் :

* 1992ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் விளையாடியுள்ளார். மேலும், 1984,1985,1989,1990 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

*2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, பின்னர் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். இவரது பயிற்சியின்கிழ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும், 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

*மேலும், ஆம்ஸ்ட்ரடாம் அணிக்கு பயிற்சியாளராகவும், நெதர்லாந்து அணிக்கு துணை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

*2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற நெதர்லாந்து அணிக்கும் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரை கிரஹாம் ரீட் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/hockey/watch-interesting-facts-about-indias-new-mens-hockey-coach-graham-reid-1-1/na20190409055934936

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.