இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஹாக்கித் தொடர் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற குரூப் போட்டியில் இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதில், ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலேயே நியூசிலாந்து வீராங்கனை ஒலிவியா கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே நியூசிலாந்து அணி கோல் அடித்திருந்தாலும், இந்திய வீராங்கனைகள் மனம் தளராது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சர்மிளா முதல் கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை பெற்றுத்தந்தார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீராங்கனை பியிட்டி 27ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியது. 43ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சர்மிளா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
-
FT: 🇮🇳 4-1 🇳🇿
— Hockey India (@TheHockeyIndia) December 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Another day, another feat unlocked! ✔️
Kudos to Team New Zealand for putting up an equally brave fight against our Jr. Indian Eves! 👏#IndiaKaGame #INDvNZL pic.twitter.com/zJJqCO0tyi
">FT: 🇮🇳 4-1 🇳🇿
— Hockey India (@TheHockeyIndia) December 7, 2019
Another day, another feat unlocked! ✔️
Kudos to Team New Zealand for putting up an equally brave fight against our Jr. Indian Eves! 👏#IndiaKaGame #INDvNZL pic.twitter.com/zJJqCO0tyiFT: 🇮🇳 4-1 🇳🇿
— Hockey India (@TheHockeyIndia) December 7, 2019
Another day, another feat unlocked! ✔️
Kudos to Team New Zealand for putting up an equally brave fight against our Jr. Indian Eves! 👏#IndiaKaGame #INDvNZL pic.twitter.com/zJJqCO0tyi
அதன்பின், 48ஆவது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீராங்கனை லால்ரிங்கி தன்பங்கிற்கு கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: இரண்டாவது முறையாக ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்!