புவேனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2020-21ஆம் ஆண்டுக்கான எஃப்.ஐ.ஹெச். லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி ஆறாவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிலன் வுதர்ஸ்பூன், 18ஆவது நிமிடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டாம் ஜோசப் விக்ஹம் கோல் அடித்து அசத்தினர்.
இதற்கு பதிலடி தரும்விதமாக இந்திய வீரர் ராஜ்குமார் பால் ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதையடுத்து, மீண்டும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 41, 42ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தது. ஆஸ்திரேலிய வீரர் தாமஸ் ஷார்ப், ஜேகப் ஜான் ஆண்டர்சன் ஆகியோர் முறையே கோல் அடித்தனர்.
இதனால், மூன்றாவது குவார்டரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, கடைசி குவார்டரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு 47ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்து. இதைச் சிறப்பாகப் பயன்படுத்தி ராஜ்குமார் பால் கோலாக்கினார்.
-
2020 FIH Hockey Pro League: match highlights: IND v AUS (M)#FIHProLeague #INDvAUS@Kookaburras @HockeyAustralia @TheHockeyIndia pic.twitter.com/IiFroxD226
— International Hockey Federation (@FIH_Hockey) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2020 FIH Hockey Pro League: match highlights: IND v AUS (M)#FIHProLeague #INDvAUS@Kookaburras @HockeyAustralia @TheHockeyIndia pic.twitter.com/IiFroxD226
— International Hockey Federation (@FIH_Hockey) February 21, 20202020 FIH Hockey Pro League: match highlights: IND v AUS (M)#FIHProLeague #INDvAUS@Kookaburras @HockeyAustralia @TheHockeyIndia pic.twitter.com/IiFroxD226
— International Hockey Federation (@FIH_Hockey) February 21, 2020
இதையடுத்து, 52ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் தடுப்பாட்ட வீரர் ருபிந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் கோல் அடித்ததால், இப்போட்டியில் இந்திய அணி டிரா செய்யும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு தோன்றியது. அதற்கு ஏற்றாற்போல இந்திய அணிக்கு கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பொன்னான வாய்ப்பை ருபிந்தர் சிங் வீணடித்தார்.
அவர் அடித்த ஷாட் கோல் கம்பத்தைத் தாண்டிச் சென்றதால், இந்திய அணி இப்போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்பது புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், இந்திய அணி எட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: கணவருக்கு எதிராக ஹாக்கி பெண் கேப்டன் புகார்!