மலேசியாவில் 21 வயதுக்குள்பட்டோருக்கான ஒன்பதாவது சுல்தான் ஜோஹர் ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன், ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கத் தவறியது.
இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கார்னரை, பிரிட்டன் கோல்கீப்பர் மார்செலோ தடுத்தார். பிறகு 49ஆவது நிமிடத்தில் மீண்டும் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கார்னரை குர்சாஹிபித் சிங் கோலாக மாற்றினார். இதையடுத்து, 50ஆவது நிமிடத்திலேயே பிரிட்டன் வீரர் ஸ்டூவர்ட் பெனால்டி கார்னர் முறையில் கோல் அடித்தார்.
-
It has been an exceptional tournament for our Indian Jr. Men's Hockey Team! Give it up to the Runners-up of the 9th Sultan of Johor Cup - #TeamIndia! 👏🏼#IndiaKaGame #SultanOfJohorCup #SOJC pic.twitter.com/GMCMLLbm70
— Hockey India (@TheHockeyIndia) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It has been an exceptional tournament for our Indian Jr. Men's Hockey Team! Give it up to the Runners-up of the 9th Sultan of Johor Cup - #TeamIndia! 👏🏼#IndiaKaGame #SultanOfJohorCup #SOJC pic.twitter.com/GMCMLLbm70
— Hockey India (@TheHockeyIndia) October 19, 2019It has been an exceptional tournament for our Indian Jr. Men's Hockey Team! Give it up to the Runners-up of the 9th Sultan of Johor Cup - #TeamIndia! 👏🏼#IndiaKaGame #SultanOfJohorCup #SOJC pic.twitter.com/GMCMLLbm70
— Hockey India (@TheHockeyIndia) October 19, 2019
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸ்டூவர்ட் மீண்டும் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி இப்போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.