டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள் இந்தியாவின் ஒடிசா மாநில தலைநகரான புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ரஷ்ய அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய முதல் பாதி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி கோலடித்தது. அதன்பின் தனது அபார ஆட்டத்தின் மூலம் 24ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் மந்தீப் சிங் கோலடித்து அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் முதல் பகுதிநேர ஆட்டமுடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
அதன்பின் தொடங்கிய இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் இந்திய அணியின் சுனில் 48ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் மந்தீப் சிங் மீண்டும் ஒருகோலடிக்க இந்திய அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
-
FT: 🇮🇳 4-2 🇷🇺
— Hockey India (@TheHockeyIndia) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kudos to our #MenInBlue for claiming their victory over Russia in the first-leg of the ongoing @FIH_Hockey Olympic Qualifiers Odisha. 👏 #IndiaKaGame #INDvRUS #RoadToTokyo #Tokyo2020 #KalingaKalling #GiftOfHockey pic.twitter.com/IvY3jfafY4
">FT: 🇮🇳 4-2 🇷🇺
— Hockey India (@TheHockeyIndia) November 1, 2019
Kudos to our #MenInBlue for claiming their victory over Russia in the first-leg of the ongoing @FIH_Hockey Olympic Qualifiers Odisha. 👏 #IndiaKaGame #INDvRUS #RoadToTokyo #Tokyo2020 #KalingaKalling #GiftOfHockey pic.twitter.com/IvY3jfafY4FT: 🇮🇳 4-2 🇷🇺
— Hockey India (@TheHockeyIndia) November 1, 2019
Kudos to our #MenInBlue for claiming their victory over Russia in the first-leg of the ongoing @FIH_Hockey Olympic Qualifiers Odisha. 👏 #IndiaKaGame #INDvRUS #RoadToTokyo #Tokyo2020 #KalingaKalling #GiftOfHockey pic.twitter.com/IvY3jfafY4
அதன்பின் ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணி மேலும் ஒரு கோலடித்தது. இதன்மூலம் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அணியை வீழ்த்தி ஒலிம்பிக் தொடருக்கான தனது முதலடியை எடுத்து வைத்துள்ளது.
இதையும் படிங்க:#OlympicQualifiers: தகுதிச்சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான்!