கரோனா பெருந்தொற்று உலகைச் சூறையாடி வரும் வேளையில், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் டிஃபென்டர் ரீனா கோகர், ஒலிம்பிக் விளையாட்டிற்காக தற்போதிலிருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து பேசிய ரீனா கோகர், ’எனது வாழ்க்கையில் நான் இதுவரை பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்துள்ளேன். ஆனால் தற்போது எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணிக்கு என்னால் முடிந்தவற்றை செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சி எடுத்து வருகிறேன்.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பதக்கம் வெல்வதே எனது முக்கிய குறிக்கோள். அதனால் அடுத்த சில மாதங்களை எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நேரமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனையான ரீனா கோகர், இதுவரை 45 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த ஹைதராபாத்!