2020-21 ஆண்டுக்கான எஃப். ஐ. ஹெச் ப்ரோ ஹாக்கி லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும்.
அதன்படி, புபனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

முதல் குவார்ட்ரில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தும் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. இந்த நிலையில், 23ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிரெண்ட் மிட்டான் கோல் அடித்தார். அதற்கு பதிலடி தரும்விதமாக இந்திய அணியின் நட்சத்திர டிஃபெண்டர் ருபிந்தர் பால் சிங் பெனால்டி கார்னர் முறையில் மிரட்டலான கோல் அடித்தார்.
இதையடுத்து, இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்ததால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன்பின் ஆஸ்திரேலிய அணி மீண்டும் அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பலனாக 46ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் சலவ்ஸ்கி கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில் இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததால், ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில், இந்திய வீரர்கள் முதல் மூன்று வாய்ப்புகளிலும் கோல் அடித்து அசத்தியிருந்தனர்.
மறுமுனையில், இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் அனுபவமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் வாய்ப்பை தவிர்த்து அடுத்த மூன்று வாய்ப்புகளிலும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இதனால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கின்படி இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்று இரண்டு புள்ளிகளைப் பெற்றது.
-
#FIHProLeague - India claim bonus point with shoot-out triumph over Australia.
— International Hockey Federation (@FIH_Hockey) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read more: https://t.co/XiACmk9lQy@TheHockeyIndia @Kookaburras @HockeyAustralia pic.twitter.com/augnxZBC34
">#FIHProLeague - India claim bonus point with shoot-out triumph over Australia.
— International Hockey Federation (@FIH_Hockey) February 22, 2020
Read more: https://t.co/XiACmk9lQy@TheHockeyIndia @Kookaburras @HockeyAustralia pic.twitter.com/augnxZBC34#FIHProLeague - India claim bonus point with shoot-out triumph over Australia.
— International Hockey Federation (@FIH_Hockey) February 22, 2020
Read more: https://t.co/XiACmk9lQy@TheHockeyIndia @Kookaburras @HockeyAustralia pic.twitter.com/augnxZBC34
பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றிபெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும் என்பது கவனத்துக்குரியது. இப்போட்டியின்மூலம் ஆஸ்திரேலியா, இந்தியா முறையே தலா 10 புள்ளிகளுடன் மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டி பெர்லின் நகரில் வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ஹங்கேரி ஓபன் தொடரில் வெள்ளி வென்ற இந்திய ஜோடி!