இன்று (ஆக.05) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதக்க கனவை நனவாக்கியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், ஜலேந்தரைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மந்தீப் சிங், தனது குடும்பத்தினருடனும் நமது ஈ டிவி பாரத்துடனும் அலைபேசி வழியாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கொண்டாடியுள்ளார்.
26 வயது ஹாக்கி வீரரான மந்தீப் சிங், இறுதியாக இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 1980ஆம் ஆண்டில் பிறந்திருக்கக்கூட இல்லை. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்திய ஹாக்கி அணி தனது ஒலிம்பிக் வரலாற்றில் எட்டு முறை தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் 1928 டு டோக்கியோ 2020: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கடந்துவந்த பாதை