கொச்சி (கேரளா): வரும் 2021-22ஆம் ஆண்டிற்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இத்தொடரில் விளையாடும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக செர்பியா நாட்டைச் சேர்ந்த இவான் வுகோமனோவிக் இரண்டு நாள்களுக்கு முன்னால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவான் தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள காணொலியில்," கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு வெற்றி மனநிலை அளிப்பதுதான் என்னுடைய முதல் வேலை. ஒரு பயிற்சியாளராக கோப்பையை வெல்வதைதான் நான் விரும்புவேன்.
கோப்பையை வெல்வதுற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கமுடியாது என்றாலும், எங்களின் கடின உழைப்பிற்கும், சிறப்பான ஆட்டத்திற்கும் என்னால் உத்தரவாதம் அளிக்கமுடியும்.
கேரளா அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். சிறப்பான முயற்சியும், பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படும்பட்சத்தில் அவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெற முடி.யும் என எதிர்பார்க்கிறேன்.
-
How stoked are you to see Coach Ivan donning 🟡? 🤩@ivanvuko19 #SwagathamIvan #YennumYellow pic.twitter.com/9PvU4sJngJ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How stoked are you to see Coach Ivan donning 🟡? 🤩@ivanvuko19 #SwagathamIvan #YennumYellow pic.twitter.com/9PvU4sJngJ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) June 20, 2021How stoked are you to see Coach Ivan donning 🟡? 🤩@ivanvuko19 #SwagathamIvan #YennumYellow pic.twitter.com/9PvU4sJngJ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) June 20, 2021
ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், பயிற்சியளிப்பதில் ஒவ்வொரு பாணி இருக்கும், என்னை பொறுத்தவரை ஆக்ரோஷமாக விளையாடுவதையே விரும்புவேன். இது வீரர்களின் மனநிலை, ட்ரேசிங் ரூம் மனநிலை ஆகியவற்றை சார்ந்து மாறுபடும்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி கடந்த 2020-21 சீசனில் பத்தாவது இடத்தையும், 2019-20 சீசனில் ஏழாவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பேயர்ன் முனிச்' அணிக்கு ஆடத் தயாராகும் வங்காளச் சிறுவன்!