ETV Bharat / sports

ராமோஸ் எப்போதும் எங்களுடன் இருக்க வேண்டும்: ரியல் மேட்ரிட் சிடேன்! - ரியல் மேட்ரிட்

டிஃபெண்டர் செர்ஜியோ ராமோஸ் ரியல் எப்போதும் எங்கள் அணியில் இருக்க வேண்டும் என ரியல் மேட்ரிட் அணியின் மேனேஜர் சினடேன் சிடேன் தெரிவித்துள்ளார்.

we-want-ramos-to-be-with-us-forever-zidane

author img

By

Published : Nov 4, 2020, 4:44 PM IST

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இண்டர் மிலன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ராமோஸ், ரியல் மேட்ரிட் அணிக்காக 100ஆவது கோலை அடித்தார்.

இதுகுறித்து ரியல் மேட்ரிட் அணியின் மேனேஜர் சினடேன் சிடேன் கூறுகையில், ''அணி கிளப்பிற்காக 100 கோல்கள் அடித்திருப்பது சாதாரணம் தான். ஏனென்றால் அவர் மிகவும் திறமையான வீரர். இன்றைய நாளில் வெற்றிபெறுவது முக்கியமாக இருந்தது. சரியான நேரத்தில் அவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் எங்களின் கேப்டன், லீடர் எல்லாமே. அவரை எப்போதும் எங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எப்போதும் வெளியேற மாட்டார் என்பது தெரியும். நிச்சயம் வரலாற்றின் பல பக்கங்களை மாற்றி எழுதுவார்.

ராமோஸ்
ராமோஸ்

மொத்தமாக பார்க்கும்போது ஒரு அணியாக நன்றாக விளையாடியுள்ளோம். விரைவாக இரண்டு கோல்கள் அடித்து அழுத்தம் கொடுத்தோம். ஆட்டத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் கடினமாக இருந்தது. இண்டர் மிலன் போன்ற அணிகளுக்கு எதிரான கோல்கள் அடித்து முன்னிலையில் இருப்பது நல்லது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என் கனவுகளுடன் நிஜத்தில் வாழ்ந்தது நற்பேறுதான்: வாட்சன் ஃபேர்வெல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.