ETV Bharat / sports

பன்டேஸ்லிகா: டிராவில் முடிந்த லீப்ஜிக் - ஹெர்தா ஆட்டம்! - டிராவில் முடிந்த ஆட்டம்

நடப்பு சீசன் பன்டேஸ்லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆர்.பி.லீப்ஜிக் (RB Leipzig) - ஹெர்தா(Hertha) அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

WATCH: RB Leipzig hold Hertha Berlin to 2-2 draw in Bundesliga, Schalke lose again

author img

By

Published : May 28, 2020, 1:01 PM IST

ஜெர்மனி நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வந்த பிறகு, அந்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான பன்டேஸ்லிகா கால்பந்து தொடரை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (மே 27) நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்.பி.லீப்ஜிக் அணி ஹெர்தா அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் இரு அணி வீரர்களும் தங்களின் வெற்றிக்காக தொடக்கத்திலிருந்தே போராட தொடங்கினர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட ஹெர்தா அணியின் மார்கோ க்ரூஜிக் (Marko Grujic) ஆட்டத்தின் 9’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் லீப்ஜிக் அணியின் லுகாஸ் 24’ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சம நிலையை உருவாக்கினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணி வீரர்களும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை நீடித்தனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் லீப்ஜிக் அணியின் பேட்ரிக் கோலடித்து அசத்த ஆட்டத்தில் அனல் பறக்க தொடங்கியது. பின் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஹெர்தா அணியின் கிறிஸ்டோஃப் பியாடெக் (Krzysztof Piatek) ஆட்டத்தின் 82’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

டிராவில் முடிந்த லீப்ஜிக் - ஹெர்தா ஆட்டம்

ஆனால் ஆட்டநேர முடிவில் இரு அணியும் 2-2 என்ற கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. பன்டேஸ்லிகா தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆர்.பி.லீப்ஜிக் 55 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், ஹெர்தா அணி 35 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் நீடிக்கின்றன.

இதையும் படிங்க:ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் கேகேஆர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.