ETV Bharat / sports

‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனாவின் வாழ்க்கைப் பயணம்! - அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான்

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் ‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனா மாரடைப்பு காரணமாக நேற்று (நவ. 25) காலமானார்.

Timeline: Football legend Diego Armando Maradona

author img

By

Published : Nov 26, 2020, 4:57 PM IST

சர்வதேசக் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் முக்கியப் பங்கு வகித்தவர் அர்ஜெண்டினாவின் டியாகோ மாரடோனா. 1986ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் அர்ஜெண்டினாவை வழிநடத்திய மாரடோனா, கோப்பையையும் வென்று சாதனைப் படைத்தார்.

‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனா
‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனா

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலுக்கு சிகிச்சைப் பெற்று முடித்து வீடு திரும்பிய மாரடோனா, நேற்று (நவ.25) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கால்பந்து உலகை ஆட்கொண்டு வாழ்ந்த டியாகோ மாரடோனாவின் வாழ்க்கைப் பயணம்:

  • 1960 - அக்டோபர் 30ஆம் தேதி அர்ஜெண்டினா தலைநகர் லனுஸில் மாரடோனா பிறந்தார்.
  • 1970 - தனது 10ஆவது வயதிலேயே உள்ளூர் சிறுவர் கால்பந்து அணியான லாஸ் செபோலிடாஸில் இணைந்தார்.
  • 1971 - 11ஆவது வயதில் அர்ஜெண்டினா ஜூனியர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1976 - 15ஆவது வயதில் ஆர்ஜெண்டினா ஜூனியர்ஸ் அணிக்காக தனது முதல் தொழில் முறை ஆட்டத்தில் பங்கேற்றார்.
  • 1977 - 16ஆவது வயதில் அர்ஜெண்டினா அணிக்காக தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் பங்கேற்றார்.
  • 1978 - அர்ஜெண்டினாவின் தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் மிக இளம் வயதில் அர்ஜெண்டினா தேசிய அணிக்ககாக விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
    தங்கக்கோப்பையுடன் மாரடோனா
    தங்கக்கோப்பையுடன் மாரடோனா
  • 1979 - சர்வதேசக் கால்பந்து போட்டியில் தனது முதல் கோலைப் பதிவு செய்தார். அந்த ஆண்டு அர்ஜெண்டினா அணி, ஜூனியர் கால்பந்து உலகக்கோப்பைத் தொடரையும் கைப்பற்றியது.
  • 1980 - ஸ்பேனிஷ் கால்பந்து அணியான பார்சிலோனா எஃப்சி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
  • 1981 - அதற்கு அடுத்த ஆண்டே போகா ஜூனியர்ஸ் அணிக்காக 1.52 கோடி ரூபாய்க்கு (தோராயமாக) ஓப்பந்தம் செய்யப்பட்டார்.
  • 1982 - அர்ஜெண்டினா அணிக்காக தனது முதல் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றார். அத்தொடரில் அவர் இரண்டு கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் மீண்டிம் பார்சிலோனா எஃப்சி அணிக்காக சுமார் 7.65 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அன்றைய தேதியில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற புகழையும் பெற்றார்.
    கொல்கத்தாவில் உள்ள டியாகோ மாரடோனாவின் உருவச்சிலை

  • 1983 - ஸ்பேனிஷ் கோப்பை கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
  • 1984 - இத்தாலியின் பிரபல கால்பந்துத் தொடரான சிரி ஏ-வின் நபோலி அணிக்காக 10.56 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானார். இதன் மூலம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற தனது சாதனையைத் தானே முறியடித்தார்.
  • 1986 - உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் அர்ஜெண்டினா அணியின் கேப்டனாகச் செயல்பட்டு, கோப்பையையும் வென்று கொடுத்தார். அதிலும் இங்கிலாந்து அணிக்கெதிரானப் போட்டியில் சர்ச்சையான ‘கடவுளின் கை’ என்றழைக்கப்படும் கோலைப் பதிவு செய்தார். மேலும் ஆறு வீரர்களை தாண்டி தனி ஒருவராக கோலடித்தும் அசத்தியிருந்தார். அது 2002ஆம் ஆண்டு ஃபிஃபாவின் ‘கோல் ஆஃப் த கன்ட்ரி’ விருதையும் பெற்றது.
    சர்ச்சையான ‘கடவுளின் கை’ என்ற கோலை அடித்த மாரடோனா

  • 1987 - சிரி ஏ கால்பந்துத் தொடரில் நபோலி அணி தனது முதல் கோப்பையை வெல்வதற்கு உதவினார்.
  • 1989 - தனது 28ஆவது வயதில் கிளாடியா வில்லாஃபேனை மணந்தார்.
  • 1990 - உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டியில் வெஸ்ட் ஜெர்மனி அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதே ஆண்டு அவர் தந்தையாகவும் மாறினார்.
  • 1991 - இத்தாலி கால்பந்துத் தொடரின்போது போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 15 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  • 1992 - ஸ்பேனிஷ் லீக் கால்பந்துத் தொடரின் செவில்லா அணிக்காக மீண்டும் கால்பந்து விளையாட்டில் நுழைந்தார்.
    1986ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையுடன் மாரடோனா

  • 1993 - செவில்லா அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அர்ஜெண்டினாவின் நியூவெல் ஓல்டு பாய்ஸ் அணியில் இணைந்தார்.
  • 1994 - அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
  • 1995 - போகா ஜூனியர்ஸ் அணிக்காக தனது கடைசி சீசனில் பங்கேற்றார்.
  • 1996 - போதைப்பொருள் உபயோகிப்பதை நிறுத்துவதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
    அர்ஜெண்டினா போட்டியை பார்வையாளராக ரசித்த மாரடோனா

  • 1997 - ஊக்கமருந்து சோதனையில் தோழ்வியடைந்த பின், சர்வதேசக் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • 2000 - மாரடோனாவின் 'யோ சோயா எல் டியாகோ' சுயசரிதைப் புத்தகம் வெளியானது. அதே ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.
  • 2002 - போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக கியூபாவிற்கு இடம்பெயர்ந்தார்.
    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் மாரடோனா

  • 2004 - மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எற்பட்ட விளைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • 2005 - பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே நடத்திய உரையாடல் நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக டியாகோ மாரடோனா பங்கேற்றார்.
  • 2008 - அர்ஜெண்டினா தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் கொல்கத்தாவிலுள்ள இந்தியக் கால்பந்து விளையாட்டுப் பள்ளியின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
    இந்திய கால்பந்து விளௌயாட்டு பள்ளியின் திறப்பு விழாவில் மாரடோனா
    இந்தியக் கால்பந்து விளையாட்டுப் பள்ளியின் திறப்பு விழாவில் மாரடோனா
  • 2013 - அர்ஜென்டினாவின் பிரைமிரா டி கிளப் டெபோர்டிவோ ரியெஸ்ட்ராவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2017 - இந்தியாவிற்கு மீண்டும் வருகை தந்திருந்தார். மேலும் கொல்கத்தா மைதானத்தில் இளம் வீரர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.
  • 2018 - ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின்போது அர்ஜெண்டினா-நைஜீரியா அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண பர்வையாளராகச் சென்றார்.
    இந்தியாவின் இளம் கால்பந்து வீரர்களுடன் விளையாடி மகிழ்ந்த மாரடோனா

  • 2019 - அர்ஜென்டினா கால்பந்து கிளப்பான கிம்னாசியா டி லா பிளாட்டாவின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2020 - மூளையில் ஏற்றப்பட்ட ரத்த உறைதல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று குணமடைந்தார். அதனையடுத்து நவம்பர் 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க : இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர் : போட்டி அட்டவணை, அணி விவரம் குறித்த தகவல்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.