ETV Bharat / sports

மகன் கால்பந்தாட காரை விற்ற தந்தை - கனவை எட்டிப்பிடித்த கால்பந்து வீரனின் கதை!

இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை.

ஓலா ஐனா
author img

By

Published : Oct 23, 2019, 7:14 PM IST

''செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம் செய்துகொண்டிருந்தோம். திடீரென கார் பழுதானது. எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டும். காரை அந்த இடத்திலேயே என் அப்பா வேறொருவரிடம் விற்றுவிட்டு, என்னை ரயிலில் ஏற்றினார். அவரும் என்னுடன் வந்தார். ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ரயிலில் தனியாக பயணித்தது இல்லை. எனது பயிற்சியில் அனைத்து நேரங்களிலும் என்னுடன் இருந்தார்'' இப்படிதான் தொடங்குகிறது இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் பயணம்.

ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு தனி மவுசு உண்டு. எந்தவொரு குட்டி நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. சிறுவயது முதலே அதற்கான பயிற்சியை வீரர்கள் தொடங்கிவிடுவார்கள். இதில் சிலர் வெற்றிபெறுவார்கள், சிலர் தோல்வியடைவார்கள். ஆனால் வெற்றிபெறுபவர்களின் ஒரே மந்திரம் முயற்சியும் பயிற்சியும்தான். ஆனால் அதோடு சேர்த்து குடும்பத்தினரின் ஆதரவும் விளையாட்டில் சாதிப்பதற்கு தேவை.

ஓலா ஐனா செல்சீ அணிக்காக ஆடியபோது...
ஓலா ஐனா செல்சீ அணிக்காக ஆடியபோது...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான தொடரில், 23 வயதான ஓலா ஐனா தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி, நைஜீரிய அணி மூன்றாம் இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார். நைஜீரிய மீடியாவும் ரசிகர்களும் ஓலாவை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் பொக்னர் ரெஜிஸ் கடற்கரையில் நடைபெற்ற ஒரு சிறுவர்களுக்கான கால்பந்து தொடர் அது. அந்த தொடரில் ஓலா 10 வயதில் கலந்துகொண்டு அசாத்தியமாக செயல்பட்டார். அந்தத் தொடரைப் பார்த்த பெரும்பாலானோர் ஓலா ஐனாதான் ''மிகவும் மதிக்கத்தக்க வீரர்'' எனக் கூறுகிறார்கள். அந்தப் போட்டி குறித்த செய்தி பல்வேறு கிளப்களுக்கு சென்று சேர்கிறது. ஆனால் ஓலாவை யாரும் 11 வயதுக்குட்பட்ட வீரர் என்று நம்பவில்லை.

ஓலா ஐனா
ஓலா ஐனா

அதற்காக பிறப்பு சான்றிதழை வைத்துக்கொண்டா சுற்ற முடியும் என கேட்போருக்கு, ஓலா ஐனா அதைதான் செய்தார். ஒவ்வொரு கிளப்களிலும் தனது வயது 11க்கும் கீழ்தான் என நிரூபிக்க பிறப்பு சான்றிதழுடன் அழைந்து திரிந்தார். இறுதியாக டோட்டன்ஹோம் அணியும், செல்சீ அணியும் ஓலாவுக்கு பயிற்சியளிக்க முன் வந்தன.

ஓலா ஐனாவின் தந்தை டோட்டன்ஹோம் அணியை டிக் செய்கிறார். மூன்று வாரமாக அலைந்து திரிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளில் அதன் நிர்வாகிகள் ஓலா ஐனாவிடம் மட்டமாக நடந்துகொண்டனர். அதையடுத்து 11 வயதுக்குட்பட்டோருக்கான செல்சீ அணிக்கு ஓலா ஐனா சென்று சேர்ந்தார்.

ஆனால் தினமும் பள்ளி முடித்து, செல்சீ அணியின் பயிற்சியில் பங்குபெற வேண்டும். காரில்தான் செல்ல வேண்டிய கட்டாயம். ஏனென்றால் பயிற்சி செய்யும் மைதானத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல சில மைல்களை கடக்க வேண்டும். பயிற்சி முடித்து நள்ளிரவுதான் வீட்டிற்கு வர முடியும். மீண்டும் காலை எழுந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

டொரினோ அணிக்காக ஆடியபோது..
டொரினோ அணிக்காக ஆடியபோது..

இங்கேதான் ஓலாவின் குடும்ப சூழ்நிலைகள் மாறுகிறது. ஓலா ஐனாவுடன் சேர்த்து நான்கு பேர் உடன் பிறந்தவர்கள். நான்கு பேருக்கு உணவு கொடுக்க மட்டுமே பணம் இருந்த நிலையில், ஓலாவின் பயிற்சிக்காக புதிய கார், புதிய வேலை என பலவற்றை அவரது அப்பாவும் அம்மாவும் செய்தனர்.

ஓலா ஐனா பயிற்சிக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் பெற்றோர்கள் தீவிரமாக ஓடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஓலாவின் பயிற்சிக்கு செய்த செலவுகளால் தங்கியிருந்த வீட்டினை இழக்க நேரிடுகிறது. குடும்ப சூழல் மோசமாகிறது. அதனை ''என் வாழ்வின் இருண்ட காலம். ஆனால் வாழ்வின் முக்கிய பாடம்'' என ஓலா பின்னாளில் விவரிக்கிறார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஓலா
கோல் அடித்த மகிழ்ச்சியில் ஓலா

பயிற்சிக்காக சென்றபோது நடந்தேறிய சம்பவங்கள் ஓலா ஐனாவின் நினைவில் எப்போதும் அகலாமல் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து 2016ஆம் ஆண்டு முதல்முறையாக செல்சீ அணிக்காக தொழில்முறை போட்டிகளில் பங்கேற்று, அணி வெற்றிபெற முக்கிய காரணமாக மாறினார். அதையடுத்து அடுத்த ஆண்டு கடன் பெற்றதற்காக ஹல் சிட்டி அணிக்காக ஆட சில போட்டிகளில் பங்கேற்கிறார்.

சில அணிகளோடு பயணிக்கும்போது சிறந்த லீக் தொடர்களில் ஆடுவதற்கும், சர்வதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பதற்கும் வாய்ப்பு அமையும். ஹல் சிட்டி அணிக்காக ஆடியபோது பல்வேறு அனுபவங்களை ஓலா பெற்றார். அதையடுத்துதான் டோரினோ அணிக்கு மாறுகிறார். அங்குதான் சூப்பர் ஈகிள்ஸ் என அழைக்கப்படும் நைஜீரிய கால்பந்து அணிக்காக ஆட வேண்டும் என முயற்சித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நைஜீரிய அணியில் இடம்பிடிக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி, இறுதியாக களமிறங்கினார். இங்கிலாந்தில் வளர்ந்த ஒரு கால்பந்து அணி வீரர், நைஜீரிய அணியில் ஆடி அந்த அணியை ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான தொடரில் மூன்றாவது இடம் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தார்.

ஓலா ஐனா
ஓலா ஐனா 34

வாழ்க்கை எந்த நேரத்தில் எவ்வாறு மாறும் என யாராலும் சொல்ல முடியாது. வட ஆப்பிரிக்காவில் அவரது ஆட்டம் உள்ளூர் பத்திரிகைகளில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. சமூக வலைதளங்களில் ஃபுட்பால் ரசிகர்கள் ஓலா ஐனாவை கொண்டாடுகிறார்கள்.

ஓலா ஐனாவின் தந்தை ஒலுஃபெமி இதுகுறித்து பேசுகையில், "வாழ்க்கை எப்போதும் சுமூகமாக செல்லும் படகாக இருக்காது. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஆதரவளிக்க வேண்டும். கால்பந்தில், சிலர் அதை செய்ய மாட்டார்கள். ஆனால் அனைத்து குழந்தையும் ஒருமுறை வாய்ப்பளிப்பதற்கு தகுதியானவர்கள்" என்கிறார்.

இதுபற்றி ஓலா பேசுகையில், எனது குடும்பம் செய்த தியாகங்கள் அனைத்தும் நான் சிறப்பாக விளையாடுவதற்குமான எரிபொருள். அவர்கள் கற்பனை செய்ய முடியாத வழிகளில் என் குடும்பத்தை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டு, பெருமைகொள்ள வைத்திருக்கிறேன்'' என்றார்.

ஓலா தனது பெற்றோருக்கு "திருப்பிச் செலுத்திய" வழிகளில் ஒன்று, தனது தாய் எஸ்தரை அழைத்துச் சென்று அவருக்கு ஒரு புதிய காரை வாங்கிக்கொடுத்தது. ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திலும் அவரது பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியமானது என்பதை ஓலா ஐனாவின் வாழ்க்கை உணர்த்துகிறது.

இதையும் படிங்க:#20YearsOfMithaliRaj: மகளிர் கிரிக்கெட்டின் கதவுகளைத் தகர்த்த மிதாலி!

Intro:Body:

The  story of a British Nigerian football star

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.