ஸ்பேனிஷ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் அரிட்ஸ் அடுரிஸ். 39 வயதான அடுரிஸ், அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அடுரிஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கால்பந்து தொடரிலிருந்து நான் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது. நான் ஒவ்வொரு முறையும், கால்பந்து விளையாட்டை விட்டுச் செல்வதற்கு முன், அவ்விளையாட்டு உங்களை விட்டு விலகும் என்று கூறுயுள்ளேன். நேற்று (மே 20) நான் எனது மருத்துவரை சந்தித்த போது, அவர் என்னை அறுவை சிகிச்சையாளரைப் பார்க்க சொன்னார். மேலும் எனது இடுப்பு பகுதியில் நான் கட்டாயம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சிந்திக்கும் படியும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், துரதிர்ஷ்டவசமாக எனது உடலும் ‘போதும்’ என்ற நிலையை அடைந்து விட்டது. தற்போது எனக்கு இருக்கும் கவலை எனது அணி வீரர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பதே. அதேசமயம் தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் கடுமையான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் நாம் அதனை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
- — Aritz Aduriz (@AritzAduriz11) May 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Aritz Aduriz (@AritzAduriz11) May 20, 2020
">— Aritz Aduriz (@AritzAduriz11) May 20, 2020
அதனால் நீங்கள் என்னைப் பற்றி கவலைப்படுவதை நான் விரும்பவில்லை. நான் இவ்விளையாட்டிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டதால், நாங்கள் கண்ட இறுதிப்போட்டிகான கனவுகளும் விடைபெற்று விட்டன. நான் இவ்விளையாட்டிற்கு வந்த தொடக்கம் முதல் இறுதி வரை என் மீது அன்பும், அக்கறையும் வைத்திருந்த அனைவருக்கும் எனது ஆழ்மனதிலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
அடுரிஸ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2019-20 சீசனின் முடிவில் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார். ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:கடலில் மூழ்கி முன்னாள் நட்சத்திர மல்யுத்த வீரர் ஷாட் காஸ்பார்ட் உயிரிழப்பு!