இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சௌத்தாம்டன் அணி - பிரைட்டன் அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில், ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ஃபெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பிரைட்டன் அணியின் பாஸ்கல், அதனை கோலாக மாற்றி அசத்தினார்.
இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத்தாம்டன் அணியின் ஜானீக் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் கோலடித்து, போட்டியில் சமநிலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் டிஃபென்ஸை பலப்படுத்தியதால், ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 81ஆவது நிடத்தில் சௌத்தாம்டன் அணிக்கு ஃபெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
-
Straight back to winning ways! 🙌 pic.twitter.com/Zu1q4wRpQN
— Southampton FC (@SouthamptonFC) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Straight back to winning ways! 🙌 pic.twitter.com/Zu1q4wRpQN
— Southampton FC (@SouthamptonFC) December 7, 2020Straight back to winning ways! 🙌 pic.twitter.com/Zu1q4wRpQN
— Southampton FC (@SouthamptonFC) December 7, 2020
இந்த வாய்ப்பை பயன்படுத்திய டேனி இங்ஸ், அதனை கோலாகவும் மாற்றி அசத்தினார். இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் சௌத்தாம்டன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டனை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சௌத்தாம்டன் அணி இபிஎல் புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:ஜே&கே-வின் அப்துல் சமத்தை பாராட்டிய சுரேஷ் ரெய்னா!