ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்பட்டு வரும், யூரோபா லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஆக.22) நடைபெற்றது. இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற செவில்லா அணி, மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மிலன் அணியுடன் மோதியது.
பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்திலேயே மிலன் அணியின் ரொமேலு லுகாகு(Romelu Lukaku) கோலடித்து, அணியின் கோல் கணக்கைத் தொடக்கிவைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் செவில்லா அணியின் லூக் டி ஜோங் ஆட்டத்தின் 12ஆவது மற்றும் 33ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோலகளை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின்னர் மிலான் அணியின் நட்சத்திர வீரர் காடின் ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் கோலடித்து, ஆட்டத்தில் சமநிலையை உருவாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளுக்கும் தலா இரு கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முற்பட்டதால், ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் 74ஆவது நிமிடத்தில் செவில்லா அணி கோலடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
-
🏆🏆🏆🏆🏆🏆
— Sevilla FC (@SevillaFC_ENG) August 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
CHAMPI6NS ⚪🔴#WeAreAllOfYou #UELFinal #WeareSevilla pic.twitter.com/k0WTDMUivX
">🏆🏆🏆🏆🏆🏆
— Sevilla FC (@SevillaFC_ENG) August 21, 2020
CHAMPI6NS ⚪🔴#WeAreAllOfYou #UELFinal #WeareSevilla pic.twitter.com/k0WTDMUivX🏆🏆🏆🏆🏆🏆
— Sevilla FC (@SevillaFC_ENG) August 21, 2020
CHAMPI6NS ⚪🔴#WeAreAllOfYou #UELFinal #WeareSevilla pic.twitter.com/k0WTDMUivX
தொடர்ந்து போராடிய மிலன் அணியால் எதிரணியின் டிஃபென்ஸை கடந்து கோலடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் செவில்லா அணி 3-2 என்ற கோல் கணக்கில் மிலன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் செவில்லா அணி யுரோபா லீக் கால்பந்து தொடரில் ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியும் அசத்தியுள்ளது.
இதையும் படிங்க:”ஓய்வு என்ற வார்த்தையே உங்களுக்கு இல்லை!” - ரெய்னாவுக்கு பிரதமர் கடிதம்!