2019-20ஆம் ஆண்டுக்கான சீரி ஏ (Serie A) கால்பந்து தொடர் இத்தாலியில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்டர் மிலன் அணி தனது முதல் லீக் போட்டியில் லீஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இன்டர் மிலன் அணி அட்டாக்கிங் முறையை கடைபிடித்தது. இதனால் முதல் பாதிலியே அந்த அணி இரண்டு கோல் அடித்து லீஸ் அணியை விட முன்னிலைபெற்றது.
இதையடுத்து, இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இன்டர் மிலன் அணி 60, 84 ஆகிய நிமிடங்களில் மெர்சலான இரண்டு கோல் அடித்து லீஸ் அணியை மீண்டும் மிரட்டியது. கடைசிவரை இன்டர் மிலனின் ஆக்ரோஷ ஆட்டத்திற்கு லீஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், இன்டர் மிலன் அணி 4-0 என்ற கோல் கணக்கில் லீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இன்டர் மிலன் அணி சார்பாக மார்செலோ பிரோஸோவிக், ஸ்டெஃவனோ சென்சி, ரோமிலு லுகாகு, அன்டோனியோ ஆகியோர் கோல் அடித்தனர்.