ETV Bharat / sports

கால்பந்து: கொல்கத்தாவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் ஃபிபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டி! - ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று 2022

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ஆசிய தகுதிச் சுற்று போட்டி வரும் ஜூன் 9ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

Salt Lake stadium to host India's FIFA WC qualifier against Afghanistan

author img

By

Published : Mar 3, 2020, 12:05 PM IST

கத்தார் நாட்டில் 2022ஆம் ஆண்டில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகின்றன. இதில், ஆசிய கண்டத்திற்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. ஓமன் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் 1-2 என்ற கணக்கிலும், 0-1 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. அதன்பின், கத்தார், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் டிரா செய்து மூன்று புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இதனால், இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள கத்தார், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்தச்சுற்றுக்கு முன்னேற முடியும். இந்தியா - கத்தார் அணிகளுக்கிடையேயான தகுதிச் சுற்று போட்டி வரும் மார்ச் 26ஆம் தேதி புபனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன்பின், ஜூன் 4ஆம் தேதி வங்கதேசதுக்கு எதிரான தகுதிச் சுற்று போட்டி அந்நாட்டில் நடைபெறவுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானுடனான இந்திய அணியின் தகுதிச் சுற்று போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரே அடுத்தடுத்து நடைபெறவுள்ள இரண்டு தகுதிச் சுற்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெறும் என அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான தகுதிச் சுற்று போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையும் படிங்க: எல் கிளாசிகோ: 6 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் பார்சிலோனாவை வென்ற ரியல் மாட்ரிட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.