ETV Bharat / sports

உலகின் சிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோதான், ஆனால்? - மரடோனா

ரியோ: சர்வதேச கால்பந்து விளையாட்டின் தற்போதைய சிறந்த வீரர் ரொனால்டோதான் என கால்பந்து ஜாம்பவான் பீலே தெரிவித்துள்ளார்.

ronaldo-is-the-worlds-best-footballer-right-now-pele

author img

By

Published : Mar 26, 2020, 10:15 AM IST

கிரிக்கெட்டில் எப்படி சச்சின் அல்லது லாரா ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என்பதற்கு பதில் கூற முடியாதோ, அதேபோன்ற கேள்விதான் மெஸ்ஸி அல்லது ரொனால்டோ ஆகியோரில் யார் சிறந்த கால்பந்து வீரர் என்பதும்.

இந்தக் கேள்வி கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலேவிடமும் கேட்கப்பட்டது. பிரேசிலின் பில்லாடோ என்ற யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த பீலே, '' தற்போதைய கால்பந்து உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 10 வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவர்தான் சிறந்த வீரர். ஆனால் மெஸ்ஸியின் ஆட்டத்தையும் யாராலும் மறக்க முடியாது.

ஹிகோ, ரொனால்டினோ, ரொனால்டோ நஹாரியோ, பிரான்ஸ் பெக்கன், ஜோஹன் க்ரூஃப் ஆகியோர் எப்போதும் எனக்கு பிடித்த வீரர்கள்.

ஆனால் கால்பந்து உலகின் மன்னன் ஒருவன் மட்டுமே. அது நான்தான். பீலே மட்டும்தான். பீலேவைப் போல் வேறு யாராலும் இருக்க முடியாது'' என்றார்.

22 வருடங்களாக சர்வதேச கால்பந்து விளையாட்டுகளில் பங்கேற்ற பீலே, மூன்று உலகக்கோப்பையை வென்றதுடன் 1000 கோல்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் பீலேவுக்கு பிடித்த வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா அணியின் ஜாம்பவான் வீரர் மரடோனாவின் பெயரைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மரடோனா ஸ்டைலில் கோல் அடித்த 21 வயது வீரர்! - வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.