ஜுவாண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு உரையாடியுள்ளார். அப்போது அத்தொலைக்காட்சி சார்பில் அவருக்காக ஒரு காணொலி சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தக் காணொலியானது ரொனால்டோவின் மறைந்த தந்தை பற்றியது. அந்தத் காணொலியை கண்ட ரொனால்டோ அந்நிகழ்ச்சியிலேயே கண்கலங்கினார். மேலும் இதை என் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.
உலகின் புகழ் உச்சியிலிருக்கும் ரொனால்டோ தனது தந்தை மீதுள்ள அதீத அன்பினால் கண்கலங்கிய சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.