உலக கால்பந்து விளையாட்டில் பிரேசில் அணி தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே வைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர்கள் பிரேசில் அணியின் வீரர்கள்தான். அப்படி பிரேசில் கால்பந்தாட்ட அணியின் நடத்திர வீரராக வலம் வந்தவர் ரொனால்டினோ. இவர் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பிரேசில் அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமானவராக திகழ்ந்தார்.
இந்நிலையில் போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் செல்ல முயன்றதாக ரொால்டினோ, அவரது சகோதரர் ராபர்டோ ஆகியோர் பராகுவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் 2015ஆம் ஆண்டு, பிரேசிலின் பாதுகாக்கப்பட்ட ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி 8.5மில்லியன் டாலர்களை அபராதமாக பிரேசில் அரசு விதித்திருந்தது. ஆனால் அபராதத்தை கட்ட தவறியதால் 2018ஆம் ஆண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற உத்திரவையும் பிரேசில் நீதிமன்றம் பிறப்பித்து அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கங்கையில் குளித்த தென் ஆப்பிரிக்க வீரர்... கலாய்த்த ஹர்பஜன் சிங்