ETV Bharat / sports

இபிஎல் 2020: லெய்செஸ்டரை பந்தாடியது லிவர்பூல்! - லெய்செஸ்டர் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Records tumble as Liverpool beat Leicester 3-0 in EPL

author img

By

Published : Nov 23, 2020, 5:13 PM IST

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (நவ.23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணி, லெய்செஸ்டர் சிட்டி அணியை எதிர்த்து விளையாடியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியின் ஜானி எவன்ஸ் ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

அவரைத் தொடர்ந்து அந்த அணியின் டியாகோ ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் அசத்தால கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லிவர்பூல் அணியின் ரொபெர்டோ ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இறுதிவரை போராடிய லெய்செஸ்டர் சிட்டி அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணி இபிஎல் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க:WWE Universe: கடைசி போட்டியில் பங்கேற்றார் ‘தி அண்டர்டேக்கர்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.