ETV Bharat / sports

கரோனா வைரஸ்: மருத்துவ உபகரணங்களை சேகரிக்க உதவும் கால்பந்து மைதானம்

author img

By

Published : Mar 26, 2020, 11:42 PM IST

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவ உபகரணங்களை சேகரிக்கும் இடமாக ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் சன்டிகோ பெர்னாபு மைதானம் பயன்படவுள்ளது.

Combating COVID-19: Real Madrid's Santiago Bernabeu to be used as medical supplies storage facility

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் ஐரோப்பா கண்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஐரோப்பா கண்டங்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இத்தாலிக்கு அடுத்தப்படியாக படுமோசமான நிலையில் ஸ்பெயின் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, பார்சிலோனாவில் உள்ள மருத்துவமனைக்கு 0.5 மில்லியன் யூரோக்களை நிதியுதவி வழங்கினார்.

இந்நிலையில், ஸ்பெனில் கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவ உபகரணங்களை சேகரிக்கும் இடமாக ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் சொந்த மைதானமான சன்டிகோ பயன்படவுள்ளது. இதனை ரியல் மாட்ரிட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியது.

இதையும் படிங்க: உலகின் சிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோதான், ஆனால்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.