ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் 9ஆவது நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர வீரர் வால்ஸ்கீஸ் கோலடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை சிட்டி எஃப்சி அணியின் ஒபேச்சே ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மன்ராய், ஆட்ட விதிகளை மீறி செயல்பட்டதால், நடுவர் ரெட் கார்ட் வழங்கினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், இரு அணிகளும் வெற்றியை பெற கடுமையாக முயற்சித்தனர். இருப்பினும் அவர்களின் கோலடிக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணானது.
-
An action-packed game ends in a thrilling draw!
— Jamshedpur FC (@JamshedpurFC) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Well played, lads! 👏👏🔥#MCFCJFC #JamKeKhelo pic.twitter.com/5R3ka4pQrn
">An action-packed game ends in a thrilling draw!
— Jamshedpur FC (@JamshedpurFC) December 14, 2020
Well played, lads! 👏👏🔥#MCFCJFC #JamKeKhelo pic.twitter.com/5R3ka4pQrnAn action-packed game ends in a thrilling draw!
— Jamshedpur FC (@JamshedpurFC) December 14, 2020
Well played, lads! 👏👏🔥#MCFCJFC #JamKeKhelo pic.twitter.com/5R3ka4pQrn
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி 13 புள்ளிகலுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 7 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் நீடிக்கிறது.
இதையும் படிங்க:லிவர்பூல் அணியின் முன்னாள் பயிற்சியாளர் காலமானார்!